புதுச்சேரி

புதுவையில் தன் குழந்தையை அரசு மழலையர் பள்ளியில் சேர்த்த கல்வித் துறை இயக்குநர்

DIN

புதுச்சேரி:  புதுவையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முன் மழலையர் பள்ளிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள 400-க்கும் மேற்பட்ட முன் மழலையர் பள்ளிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அனைவருக்கும் முன்னுதாரனமாக, புதுவை கல்வித் துறை இயக்குநர் ருத்ர கவுடு தனது மகனை, லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி அரசு நடுநிலைப்பள்ளியில் முன்மழலையர்(எல்கேஜி) வகுப்பில் சேர்த்தார்.

இன்று புதுவை கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு மகன் அசுகோஸ்(3), அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு சேர்க்கைக்கு அனுமதித்தார். அவருக்கு இனிப்பு வழங்கி பள்ளியில் எல்கேஜி சேர்க்கை வழங்கப்பட்டது. 

புதுவையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் தனியார் மழலையர் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து வரும் நிலையில், கல்வித்துறை இயக்குநர் ஒருவர் தனது மகனை மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT