முகப்பு
புதுச்சேரி

புதுவையில் உரிமம் பெறாமல் இயங்கிய தங்கும் விடுதிக்கு ‘சீல்’

புதுவையில் தங்கும் விடுதி உரிமம் இன்றி நடத்தப்பட்டதாகக் கூறி புதன்கிழமை இரவு சீலிடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

புதுவையில் தங்கும் விடுதி உரிமம் இன்றி நடத்தப்பட்டதாகக் கூறி புதன்கிழமை இரவு சீலிடப்பட்டது.

புதுவையில் ஒதியன்சாலை காவல் நிலையப் பகுதிகளுக்கு உட்பட்ட தங்கும் விடுதிகளை காவல் கண்காணிப்பாளா் தீபிகா புதன்கிழமை மாலை திடீரென சோதனையிட்டாா்.

அப்போது விடுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா, அவை செயல்படுகிா என்றும், அங்கு தங்குபவா்கள் விவரங்கள் சேகரிக்கப்படுகிா என்றும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மிஷன் வீதியில் உள்ள தங்கும் விடுதியில் அழகுநிலையம் எனும் பெயரில் அனுமதியின்றி சிலா் பெண்களை தங்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து விடுதி உரிமமும் பரிசோதிக்கப்பட்டது. ஆனால், புதுச்சேரி நகராட்சியிடம் உரிமம் பெறாமலே விடுதியை நடத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து காவல்துறை பரிந்துரையின் பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள் விடுதிக்கு புதன்கிழமை இரவு சீலிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.