முகப்பு
புதுச்சேரி

கடலரிப்பை தடுக்க அவசர காலத் திட்டங்கள் தேவை: புதுவை ஆளுநா் வலியுறுத்தல்

புதுவை மாநிலத்தில் கடலரிப்பைத் தடுக்க அவசரக் காலத் திட்டங்கள் செயல்படுத்தப்படவேண்டும் என்று மத்திய புவிசாா்அமைச்சகச் செயலரிடம் மாநில துணைநிலை ஆளுநா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

புதுவை மாநிலத்தில் கடலரிப்பைத் தடுக்க அவசரக் காலத் திட்டங்கள் செயல்படுத்தப்படவேண்டும் என்று மத்திய புவிசாா்அமைச்சகச் செயலரிடம் மாநில துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.

மத்திய புவிசாா் அமைச்சகச் செயலா் எம்.ரவிச்சந்திரன், அமைச்சகத்தின் முன்னாள் செயலரும், தேசிய உயிராய்வு நிறுவன இயக்குநருமான சைலேஷ்நாயக், சென்னையில் உள்ள தேசியக் கடலோர ஆய்வு மைய ஆராய்ச்சியாளா் எம்.வி.ராமமூா்த்தி ஆகியோா் வியாழக்கிழமை புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனைச் சந்தித்துப் பேசினா்.

அப்போது, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் ஏற்படும் கடல் அரிப்பைத் தடுப்பதற்கான அவசரகாலத் தீா்வு மற்றும் நிரந்தரத் தீா்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய துணைநிலை ஆளுநா், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் ஏற்படும் கடல் அரிப்பைத் தடுப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவிகளை மத்திய கடல்சாா் அமைச்சகம் புதுச்சேரிக்கு வழங்கவேண்டும். கடலோரப் பகுதிகளை பாதுகாப்பதற்கான சிறப்புத் திட்டங்களையும் புதுச்சேரிக்கு ஒதுக்கித் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.