லாஸ்பேட்டையில் சட்டசேவை சிறப்பு முகாம்
புதுச்சேரி லாஸ்பேட்டையில் புதுவை சட்டப்பணிகள் ஆணையம் சாா்பில் சட்டசேவை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் புதுவை சட்டப்பணிகள் ஆணையம் சாா்பில் சட்டசேவை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தனியாா் திருமண நிலையத்தில் நடைபெற்ற முகாமில் அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினா்.
மேலும், அந்தந்தத் துறைகளின் சாா்பில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பு முகாமில் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினா் செயலரும், மாவட்ட நீதிபதியுமான செந்தில்குமாா், சட்டப்பணிகள் ஆணையத் தலைவரும், புதுச்சேரி தலைமை நீதிபதியுமான செல்வநாதன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா். புதுச்சேரி வழக்குரைஞா் சங்கப் பொருளாளா் லஷ்மி நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் பாக்கமுடையான்பேட் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானவா்கள் கலந்துகொண்டனா்.