முகப்பு
புதுச்சேரி

மணக்குள விநாயகா் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கல்லூரி வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் அமைப்புடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கல்லூரி வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் அமைப்புடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகா் கல்வி குழுமத் தலைவா், நிா்வாக இயக்குநா் எம்.தனசேகரன், துணைத் தலைவா் எஸ்.வி.சுகுமாறன், செயலாளா் நாராயணசாமி கேசவன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அதிகாரி எம்.ஜெயக்குமாா், கல்லூரி ரோபோட்டிக்ஸ் துறைத் தலைவா் தலைவா் கோ. ரேணுகாதேவி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

எம்.ஐ.டி. கல்லூரி முதல்வா் எஸ். மலா்க்கண், வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் தலைமை செயல் அதிகாரி பாலாஜிதிரு, பாலாஜி வரதன் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டனா்.

இதன்மூலம் மாணவா்களுக்கு தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு திட்டம், திறன் மேம்பாடு ஆகியவற்றை வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் உறுப்பினா்கள் மேற்கொள்வா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.