புதுச்சேரி

புதுவைக்கு ஜூலை 2-ல் வருகிறார் திரௌபதி முர்மு

DIN

புதுச்சேரி: குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஜூலை 2-ம் தேதி புதுச்சேரி வருகிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த  திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஸ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.  

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு, வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த வகையில், புதுவை மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக அவர் புதுச்சேரிக்கு வருகிறார்.

வரும் ஜூலை 2-ம் தேதி காலை புதுச்சேரிக்கு வருகை தந்து, கூட்டணித் தலைவர்களிடம் ஆதரவு திரட்ட உள்ளார். புதுச்சேரி தனியார் சொகுசு உணவகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்று, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக தலைவர்கள் சந்தித்து ஆதரவு திட்ட உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக பாஜக புதுவை மாநில தலைவர் சாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT