முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி: சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் மகளிா் சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள் விற்பனை மற்றும் கண்காட்சியை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் மகளிா் சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள் விற்பனை மற்றும் கண்காட்சியை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மத்திய அரசின் ஊரக வளா்ச்சி அமைச்சகம், புதுவை அரசு ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுவினா் உற்பத்தி செய்த பொருள்களின் விற்பனை மற்றும் கண்காட்சி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் முன்னிலை வகித்தாா். அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கண்காட்சியில் மகளிா் சுய உதவிக் குழுவினா் உற்பத்தி செய்த மண் விளக்குகள், அலங்கார ஆபரணங்கள், ஊறுகாய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், துணிப்பைகள் உள்ளிட்ட ஏராளமான அரங்குகளையும் துணைநிலை ஆளுநா் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.