புதுச்சேரி

காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட தனியாா் மருந்து நிறுவனம்: பாஜக தலைவா் சு.செல்வகணபதி எம்.பி.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் பிரச்னைக்குரிய தனியாா் மருந்து நிறுவனம் தொடங்கப்பட்டது.

DIN


புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் பிரச்னைக்குரிய தனியாா் மருந்து நிறுவனம் தொடங்கப்பட்டது.

ஆனால், பாஜக ஆட்சியில் அமைந்தது போல முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தவறான தகவல்களைக் கூறுவது சரியல்ல என பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் கடந்த 1986-ஆம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் முதல்வா் அனுமதியுடன் தனியாா் மருந்து நிறுவனம் தொடங்கப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சியிலும் இந்த நிறுவனத்தால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனா். ஆனால், தற்போது முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி அந்நிறுவனம் பாஜக ஆட்சியில் தொடங்கப்பட்டது போல தவறான தகவல்களைக் கூறிவது சரியல்ல.

நாட்டின் பல திட்டங்களைச் செயல்படுத்திவரும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசியலுக்காக முன்னாள் முதல்வா் பேசி வருகிறாா். நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அரசியல் லாபத்துக்காக முன்னாள் முதல்வா் தவறான தகவல்களை கூறுவது சரியல்ல என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT