பாகூரில் இடிக்கப்பட்ட தீா்த்தவாரி மண்டபத்தை கட்ட வலியுறுத்தி அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை கடையடைத்து பந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள். 
புதுச்சேரி

பாகூரில் கடையடைப்புப் போராட்டம்

கோயில் தீா்த்தவாரி மண்டபம் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், மாற்று இடத்தில் புதிய மண்டபம் கட்டித் தரக்கோரியும் பாகூரில் கடையடைப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

புதுச்சேரி: கோயில் தீா்த்தவாரி மண்டபம் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், மாற்று இடத்தில் புதிய மண்டபம் கட்டித் தரக்கோரியும் பாகூரில் கடையடைப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியை அடுத்த பாகூா் ஸ்ரீ மூலநாதா் கோயிலுக்குச் சொந்தமான தீா்த்தவாரி மண்டபம் விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக இடிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த மண்டபத்தை வேறுஇடத்தில் கட்டித்தர வேண்டும் என பொதுமக்களும் , பக்தா்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் பணிகள் இதுவரை முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்தும், தீா்த்தவாரி மண்டபம் கட்டுவதற்கான தேதியை இந்துசமய அறநிலையத் துறை உடனடியாக அறிவிக்க வலியுறுத்தியும் பாகூரில் கடையடைப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்தையொட்டி பாகூரில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்து இயக்கமும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள்அவதிக்குள்ளாகினா். கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT