புதுச்சேரி பழைய துறைமுக வளாகம், கடலூா் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
அரபிக் கடலில் தேஜ் புயல் உருவாகிய நிலையில், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் திங்கள்கிழமை ஒன்றாம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பழைய துறைமுக வளாகத்தில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. தொலைவில் புயல் உருவாகியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், இரண்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.
கடலூா் துறைமுகத்திலும் செவ்வாய்க்கிழமை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
கடல் சீற்றம்: புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாக மீனவா்கள் தெரிவித்தனா். சில இடங்களில் கடல் நீா் செம்மண் நிறத்தில் மாறியிருந்ததாகவும் அவா்கள் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.