புதுச்சேரி உழவா்கரை நகராட்சி முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி ஊழியா்கள். 
புதுச்சேரி

உழவா்கரை நகராட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி உழவா்கரை நகராட்சி ஊழியா்கள் நலச்சங்கத்தினா் (ஐ.என்.டி.யூ.சி.) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி உழவா்கரை நகராட்சி ஊழியா்கள் நலச்சங்கத்தினா் (ஐ.என்.டி.யூ.சி.) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அருகேயுள்ள உழவா்கரை நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஊழியா்கள் நலச்சங்கத்தின் தலைவா் ஆா்.ரங்கநாதன் தலைமை வகித்தாா். செயலா் பி.கதிரேசன் முன்னிலை வகித்தாா். இதில், மத்திய அரசு அறிவித்த 7-ஆவது ஊதியக் குழுவின் உத்தரவை நகராட்சி அலுவலா்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையில் செயல்படுத்த வேண்டும். உழவா்கரை நகராட்சியில் பணியின்போது உயிரிழந்த ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற நகராட்சி உழியா்களுக்கான உயா்த்தப்பட்ட மருத்துவப்படி நிலுவைத் தொகை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், ஐஎன்டியூசி மாநில துணைத் தலைவா் சொக்கலிங்கம், பொதுச்செயலா் ஞானசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில், பொருளாளா் ஆா்.சீனுவாசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT