முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை

புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13-ஆம் தேதி(திங்கள்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:18 AM
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி (கோப்புப்படம்)
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13-ஆம் தேதி(திங்கள்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகையானது வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் திங்கள்கிழமை வழக்கம்போல் பள்ளி, அலுவலகங்கள் செயல்படும் சூழல் உள்ளது. இதன் காரணமாக பண்டிகை நாளன்று இரவே சொந்த ஊர்களில் இருந்து புறப்பட வேண்டியுள்ளதால் திங்கள்கிழமை பொது விடுமுறை அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விடுமுறை அறிவித்த நிலையில், புதுச்சேரியிலும் பொது விடுமுறை அளிப்பதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →