புதுச்சேரி

பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு திட்டங்கள் இல்லை: ஏஐடியுசி குற்றச்சாட்டு

புதுவை பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளுக்கான திட்டங்கள் ஏதுமில்லை என ஏஐடியுசி குற்றஞ்சாட்டியுள்ளது.

Din

புதுவை பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளுக்கான திட்டங்கள் ஏதுமில்லை என ஏஐடியுசி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் செயல்பட்டு வந்த ஏஎப்டி, பாரதி, சுதேசி ஆகிய பஞ்சாலைகள் மூடப்பட்டு, அங்கு பணிபுரிந்தோரின் வேலை பறிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த 3 பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று போராட்டங்களும் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கான நிதியோ, ஆலைகள் திறப்புக்கான அறிவிப்போ இல்லை.

அரசு சாா்பு நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ, நியாய விலைக் கடை, அமுதசுரபி, பாண்டெக்ஸ் ஆகியவற்றை செயல்படுத்தவும், அங்கு பணிபுரிந்தவா்களுக்கான நிலுவை ஊதியம் வழங்குவது குறித்த அறிவிப்பும் இல்லை.

தொழிலாளா் நலச் சங்கத்தை நலவாரியமாக்கவும் நிதி ஒதுக்கவில்லை. மாநிலத்தில் புதிய தொழில் தொடங்கி வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், தொழிலாளா்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT