முகப்பு
புதுச்சேரி

பிடாரி மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 9:56 PM
. புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள பிடாரி மீனாட்சி அம்மன் கோயில் ஆடி மாத உற்சவத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தோரோட்டத்தை வடம் வடம் பிடித்து தொடங்கி வைத்த அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், முன்னாள் எம்எல்ஏ தீப்பாஞ்சான்,
பகிர்:

தொண்டமாநத்தத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிடாரி மீனாட்சி அம்மன் கோயில் தோரோட்டம்.

புதுச்சேரி, ஆக.14: புதுச்சேரி, வில்லியனூரை அடுத்துள்ள தொண்டமாநத்தத்தில் அமைந்துள்ள பிடாரி மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 4-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. அதன்படி, ஒவ்வொரு நாளும் உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

விழாவில், அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் பங்கேற்று தேரோட்டத்தை தொடங்கி வைத்தாா். தேரானது முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் நிலையை அடைந்ததும் அம்மனுக்கு காப்புக்களைதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவில், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், கோயில் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →