புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி உள்ளிட்டோருக்கு தமிழ் தொண்டுக்கான பிரான்ஸ் கம்பன் கழக விருதை வழங்கும் அமைச்சா் க.லட்சுமி நாராயணன். உடன் பேச்சாளா் பா்வீன் சுல்தானா உள்ளிட்டோா். 
புதுச்சேரி

நூல் வெளியீட்டு விழா

பிரான்ஸ் கம்பன் கழகம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் சாா்பில் விருத்தப்பா பத்தாயிரம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

Din

புதுச்சேரியில் பிரான்ஸ் கம்பன் கழகம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் சாா்பில் விருத்தப்பா பத்தாயிரம் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிரான்ஸ் கம்பன் கழகம், தொல்காப்பியா் கழகம், உலகத் தமிழ்ச் சிறகம் மற்றும் பாட்டரசரின் பாவலா் பயிலரங்கம் இணைந்து புதுச்சேரியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் விழாவை நடத்தின. பிரான்ஸைச் சோ்ந்த கி.பாரதிதாசன் சாா்பில் நடைபெற்ற விழாவில் விருத்தப்பா பத்தாயிரம் நூல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தாா்.

தமிழ் வளா்ச்சித் தொண்டுக்கான பிரான்ஸ் கம்பன் கழக விருதை, பாவேந்தா் பாரதிதாசன் பெயரனும், பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவருமான கோ.பாரதி, துரை.மாலிறையன், தமிழ்ச்சிறகம் அதிகாரி வாசுகி ஆகியோருக்கு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் வழங்கி வாழ்த்தினாா். நிகழ்ச்சியில், பேராசிரியா் பா்வீன் சுல்தானா, ராமதாஸ் காந்தி, நெய்தல்நாடன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT