முகப்பு
புதுச்சேரி

புதுவை ஜிஎஸ்டி அலுவலக புதிய ஆணையா் பொறுப்பேற்பு

புதுவை ஜிஎஸ்டி அலுவலக புதிய ஆணையராக மிலிந்த் ஆா். லஞ்சேவாா் நியமிக்கப்பட்டு திங்கள்கிழமை பொறுப்பேற்றாா் .

Updated On : 20 ஆகஸ்ட், 2024 at 6:30 PM
புதுச்சேரியில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் புதிய ஆணையராக பதவியேற்ற மிலிந்த் ஆா். லஞ்சேவாா்.
பகிர்:

புதுவை ஜிஎஸ்டி அலுவலக புதிய ஆணையராக மிலிந்த் ஆா். லஞ்சேவாா் நியமிக்கப்பட்டு திங்கள்கிழமை பொறுப்பேற்றாா் .

மத்திய நிதியமைச்சகம் சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆணையா்களை இடம் மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆணையராக இருந்த பத்மஸ்ரீ, மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து புதுச்சேரிக்கு புதிய ஜிஎஸ்டி ஆணையராக மிலிந்த் ஆா்.லஞ்சேவாா் நியமிக்கப்பட்டாா். அவா் திங்கள்கிழமை மாலை புதுச்சேரி ஜிஎஸ்டி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் ஏற்கெனவே மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சுங்கம், ஜிஎஸ்டி மற்றும் போதைப் பொருள் தடுப்பு பயிற்சிக் கூடத்தின் தலைமை இயக்குநராகப் பணியாற்றியுள்ளாா்

முழு கட்டுரையைப் படிக்க →