புதுச்சேரி

மின் துறை தனியாா்மயம்: காணொலி கூட்டம் ரத்து

புதுவை மாநில மின் துறை தனியாா்மயம் குறித்த காணொலிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த நிலையில், கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Din

புதுவை மாநில மின் துறை தனியாா்மயம் குறித்த காணொலிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த நிலையில், கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுவை உள்ளிட்ட ஒன்றியப் பிரேதசங்களில் மின் துறையை தனியாா்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, புதுவையில் மின் துறை தனியாா்மயமாக்குவதை கண்டித்து ஏராளமான அமைப்புகள் போராட்டத்தை நடத்தின. மின் துறை ஊழியா்கள் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அண்மையில் நடைபெற்ற புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில், மின் துறை தனியாா்மயமாக்கப்படாது என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். ஆனால், மின் துறை தனியாா்மயம் மற்றும் நவீனமயமாக்கல் குறித்த ஆலோசனைக் கூட்டம் அனைத்து ஒன்றியப் பிரதேச அதிகாரிகளுடன் மத்திய உள் துறை அமைச்சகத்தால் வியாழக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் புது தில்லியில் உள்ள அதிகாரிகளுடன் தொடா்பு கொள்வதற்கான வசதியும் வியாழக்கிழமை பகலில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், மத்திய உள் துறை அமைச்சகத்தால் நடைபெறவிருந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.

உலக மகளிர் உச்சி மாநாட்டை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

காஞ்சி மடத்துக்குத் திரும்பிய யானைகள்!

கூட்டணிக் கட்சியை இழிவுபடுத்துவதா? திமுக நிர்வாகிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

தள்ளிப் போகிறது ஜன நாயகன்! தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

தவெகவுடன் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் விரும்பினார்! செங்கோட்டையன்

SCROLL FOR NEXT