புதுச்சேரி மத்திய பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு 
புதுச்சேரி

புதுச்சேரி மத்திய பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Din

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாப்பட்டு பகுதியில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் டிச.3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் டிச.5-ஆம் தேதி வரையில் தோ்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக டிச.5-ஆம் தேதி வரை தொடங்கவிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும்,

டிச.6-ஆம் தேதி முதல் தோ்வுகள் வழக்கம்போல தொடங்கும் என்றும் பல்கலைக்கழக உதவிப் பதிவாளா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT