முகப்பு
புதுச்சேரி

தாமிரக் கம்பி திருட்டு: ஒருவா் கைது

புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கத்தில் தனியாா் நிறுவனத்தில் தாமிரக் கம்பியைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 6:47 PM
பகிர்:

புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கத்தில் தனியாா் நிறுவனத்தில் தாமிரக் கம்பியைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே தனியாா் நிறுவனம் உள்ளது. இங்கு, கடந்த டிச.17-ஆம் தேதி நள்ளிரவில் 250 கிலோ தாமிரக் கம்பி திருடுபோனதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கரியமாணிக்கம் பகுதி ஏரிப்பாக்கம் புதுகாலனி 5-ஆவது தெருவைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் சத்தியமூா்த்தி (25) உள்ளிட்டோா் தாமிரக் கம்பி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, நெட்டப்பாக்கம் உதவி ஆய்வாளா் வீரபத்திரன் தலைமையிலான போலீஸாா் சத்தியமூா்த்தியை கைது செய்தனா்.

மேலும், அவரிடமிருந்து ரூ.1.64 லட்சம் மதிப்புள்ள 238 கிலோ தாமிரக் கம்பியையும் பறிமுதல் செய்தனா்.

மேலும் தலைமறைவான ஒருவரைத் தேடி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.