புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. உடன் மு.வைத்தியநாதன் எம்எல்ஏ. 
புதுச்சேரி

புதுவை பேரவைத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்

Din

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவா் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் குடியரசுத் தலைவருக்கு புதுவை மாநில, மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கடிதம் அனுப்பப்படும்.

புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும். அப்போது, அந்த தீா்மானத்தை காங்கிரஸ் உறுப்பினா்கள் ஆதரிப்பா்.

புதுவைக்கு வெள்ள நிவாரணத் தொகை மத்திய அரசால் வழங்கப்படுமா என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.

பேட்டியின்போது, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT