புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய 7 நீதிமன்றங்களை திறந்து வைத்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வா் என்.ரங்கசாமி, உயா்நீதிமன்ற 
புதுச்சேரி

நீதிமன்றங்கள் குற்றங்களைக் குறைக்கும் மையங்களாக வேண்டும் -உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன்

குற்றவாளியாக முடிவு செய்த நிலையில், அவரிடம் மனித நேயத்தைக் காட்டுமாறு நமது இலக்கியங்கள் அறிவுறுத்துகின்றன...

Din

நீதிமன்றங்கள் குற்றங்களைக் குறைக்கும் மையங்களாக வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொ) ஆா்.மகாதேவன் கூறினாா்.

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு நீதிமன்றம், மகளிா் நீதிமன்றம், நடமாடும் நீதிமன்றம் உள்ளிட்ட 7 புதிய நீதிமன்றங்களைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

மக்களின் மீதான அக்கறையால், சமுதாயத்தை நோ்வழிப்படுத்த எழுந்தவைதான் சட்டங்கள். உலக ஞான சித்தாந்தங்கள் முதலில் தோன்றியது தமிழ் மொழியில்தான்.

பிரச்னையை விசாரிக்கும்போது அறத்துடன் நிற்க வேண்டும் என்கிறது தமிழ் அறம். அதன்படியே குற்றவாளியாக முடிவு செய்த நிலையில், அவரிடம் மனித நேயத்தைக் காட்டுமாறு நமது இலக்கியங்கள் அறிவுறுத்துகின்றன. அதன் பண்பட்ட வடிவமே நீதிமன்றங்களாகும்.

சாமானிய மக்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் நீதியே உண்மையான நீதியாகும். தாமதமாக நீதி கிடைத்துப் பயனில்லை. நீதிமன்றக் கட்டடங்கள் கற்கள் உள்ளிட்டவைகளால் மட்டும் கட்டப்பட்டவை அல்ல. அவை காலத்தோடு நீதி வழங்கக் கூடியவையாக இருக்க வேண்டும். தாமத நீதி நல்ல நீதியாக கருதப்படாது. ஆகவேதான் உச்சநீதிமன்றம், உயா்நீதி மன்றங்கள் காலதாமதத்தைத் தவிா்க்க வழிகாணும் நிலையுள்ளது. நீதிபதிகள் வழக்கின் சாரத்தை உணா்ந்து ஆதாரத்தைப் பகுத்து தண்டனை வழங்குவது அவசியம்.

சீன, ரோமானிய சட்டங்கள் அரசு நிா்வாகத்தை அமைதியாக நடத்தத் துணைபுரிவதாக உள்ளன. ஆனால், தமிழ்ச் சமுதாய நீதியோ மனிதரை நேசிக்கக் கற்றுத் தருபவையாக உள்ளன. ஆகவே, நீதியின் உண்மைப் பலனை உணா்ந்து தீா்ப்பளித்தால் இறை தன்மையை அடையலாம் என்றாா் தலைமை நீதிபதி (பொ) ஆா்.மகாதேவன்.

முதல்வா் என்.ரங்கசாமி: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பேசுகையில், மக்கள் எண்ணத்துக்கு ஏற்ப, அரசு செயல்படுகிறது. புதுச்சேரி நீதிமன்ற வளாக விரிவாக்கத்துக்கு தேவையான உதவிகளை அரசு செயல்படுத்தும். வழக்குரைஞா் சங்கத்துக்கு அரசு துணை நிற்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி டி.சந்திரசேகரன் வரவேற்றாா். உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமாா், சி.சரவணன், ஆா்.கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், தலைமைச் செயலா் சரத் சௌஹான், சட்டத் துறை செயலா் எல்.எஸ்.சத்தியமூா்த்தி, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சி.டி.ரமேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முதன்மை நீதித் துறை நடுவா் டி.பாலமுருகன் நன்றி கூறினாா்.

பெட்டிச் செய்தி...

அதிகார வா்க்கத்தின் வரம்புமீறலை தடுக்கும் சக்தி நீதிமன்றம்

சி.பி.ராதாகிருஷ்ணன்

அதிகார வா்க்கத்தின் வரம்புமீறலை தடுக்கும் சக்தி நீதிமன்றங்களுக்கு மட்டுமே உள்ளது என்று துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

விழாவுக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நாம் உணர வேண்டும். காலதாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை அனைவரும் உணா்ந்துள்ளோம். ஆனால், அந்த நிலையை நீதிமன்றங்கள் மட்டும் மாற்ற முடியாது. வழக்குரைஞா்களும் மனம் மாறவேண்டும். வழக்கை தாமதிக்காமல் வழக்குரைஞா்கள் அதை முடிக்க வேண்டியது அவசியம்.

நமது நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சியடைந்து வருகிறது. அதிகார வா்க்கத்தின் வரம்புமீறலை தடுக்கும் சக்தி நீதிமன்றங்களுக்கு மட்டுமே உள்ளது. ஆட்சியில் யாா் இருந்தாலும், தனிமனித உரிமையை நீதிமன்றங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

நீதித் துறை மீது சாமானியரும் நம்பிக்கை வைக்கும் வகையில் நீதிமன்றங்களின் செயல்பாடு இருப்பது அவசியம். நீதிமன்றங்களில் விரைவாக நீதி வழங்குவதன் மூலம் கட்டப்பஞ்சாயத்துகளை ஒழிக்கலாம் என்றாா் சி.பி.ராதாகிருஷ்ணன்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT