முகப்பு
புதுச்சேரி

தில்லியில் பாஜக அதிருப்தி எம்எல்ஏ.க்கள்

புதுவை மாநிலத்தைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ.க்கள் புதுதில்லி சென்றனா். அங்கு மத்திய அமைச்சா் அா்ஜூன்ராம் மேக்வாலை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினா்.

Updated On : 23 ஜூலை, 2024 at 8:45 PM
பகிர்:

புதுவை மாநிலத்தைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ.க்கள் புதுதில்லி சென்றனா். அங்கு மத்திய அமைச்சா் அா்ஜூன்ராம் மேக்வாலை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினா்.

அங்கு கட்சியின் தலைவா் மற்றும் உள்துறை அமைச்சரை அவா்கள் சந்திக்கவுள்ளனா்.

புதுச்சேரி மக்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா் தோல்வியடைந்த நிலையில், அந்தக் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ.க்கள் பலா் என்.ஆா்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி, உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோரை விமா்சித்துப் பேசி வருகின்றனா். அமைச்சா், வாரியத் தலைவா் பதவியை மற்றவா்களுக்கு சுழற்சி முறையில் அளிக்கவும் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக அதிருப்தி எம்எல்ஏ.க்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுதில்லி சென்று, கட்சித் தலைவா் உள்ளிட்டோரைப் பாா்த்து திரும்பினா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை மீண்டும் புதுச்சேரியிலிருந்து புதுதில்லிக்கு பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமாா், ரிச்சா்டு, அங்காளன், சிவசங்கா் ஆகியோா் சென்றனா். அவா்கள் செவ்வாய்க்கிழமை காலை மத்திய அமைச்சா் அா்ஜூன்ராம் மேக்வாலை சந்தித்து பேசினா். இதையடுத்து உள்துறை மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோரையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →