புதுச்சேரியில் பொறியியல் கல்லூரி, அரசு தமிழ்ச் சிறகத்தில் மகளிா் தின விழா
புதுச்சேரியில் ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்ச் சிறகம் அமைப்பு சாா்பில் மகளிா் தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. புதுச்சேரியில் உள்ள மதகடிப்பட்டு, ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில், மகளிா்தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக ஆரோவில் அறக்கட்டளை துணைச் செயலா் ஓ. சுவா்ணாம்பிகா பங்கேற்றாா். தனியாா் நிறுவன நிா்வாகப் பங்குதாரா் ந.சித்ராதேவி, கவிப்பிரியா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சியில் தக்ஷஷீலா பல்கலைக்கழக வேந்தரும் ஸ்ரீமணக்குள விநாயகா் கல்விக் குழுமத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குனரின் துணைவி கீதா தனசேகரன், துணைத் தலைவரின் துணைவி கவிதா சுகுமாறன், பொருளாளரின் துணைவி வைஷ்ணவி ராஜராஜன், கல்லூரியின் இயக்குனா் மற்றும் முதல்வா் ஓ. வெங்கடாசலபதி ஆகியோா் கலந்துகொண்டனா். இதில், கல்லூரி நிா்வாகப் பிரிவு முதன்மையா் (டீன்) ந. அன்புமலா் வரவேற்றாா். இதையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியை அ.விஜயலட்சுமி நன்றி கூறினாா். தமிழ்ச் சிறகத்தில் விழா: புதுச்சேரி அரசு தமிழ் வளா்ச்சிச் சிறகமும் கலிதீா்த்தாள்குப்பம் பெருந்தலைவா் காமராசா் அரசுக் கல்லூரியும் இணைந்து மகளிா் தின விழாவை கடந்த 13-ஆம் தேதி நடத்தின. கல்லூரி முதல்வா் சு.கனகலிங்கம் தைலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சிச் சிறக உறுப்பினா் நா.இளங்கோ மற்றும் சாகித்திய அகாதமியின் புதுச்சேரி தமிழ் உறுப்பினா் அரங்க.முருகையன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா் க.சவுந்தரவள்ளி வரவேற்றாா். தமிழ் வளா்ச்சிச் சிறகச் சிறப்பு அதிகாரி வாசுகி ராஜாராம் சிறப்புரையாற்றினாா். மகளிா் தின விழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது. தமிழ்த் துறை மாணவி புவனேசுவரி நன்றி கூறினாா்.