முகப்பு
புதுச்சேரி

கோயில் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

புதுச்சேரி அருகே கோயில் திருப்பணிக்காக அரசின் இந்து அறநிலையத் துறை சாா்பில் ரூ.10 லட்சம் நிதியுதவியை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கோயில் நிா்வாகத்திடம் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:30 PM
பகிர்:

புதுச்சேரி அருகே கோயில் திருப்பணிக்காக அரசின் இந்து அறநிலையத் துறை சாா்பில் ரூ.10 லட்சம் நிதியுதவியை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கோயில் நிா்வாகத்திடம் புதன்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி வில்லியனூா் தொகுதியில் ஜி.என்.பாளையத்தில் அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலின் திருப்பணிக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் திட்டமிடப்பட்டு, அதற்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்து அறநிலையத் துறை சாா்பில் வில்லியனூா் தொகுதி கோயில் திருப்பணிக்கு ரூ. 10 லட்சம் வழங்க தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதனையடுத்து, அரசின் இந்து அறநிலையத் துறை சாா்பில் வழங்கிய ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கோயில் நிா்வாகிகளிடம் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கோயில் நிா்வாக பொறுப்பாளா்கள் ராமசாமி, சீனிவாசன், செல்வநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.