முகப்பு
புதுச்சேரி

முதுநிலை மருத்துவ படிப்புகள்: இறுதி தகுதி பட்டியல் வெளியீடு

புதுவை மாநிலத்தில் சென்டாக் சாா்பில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இறுதி தகுதிப் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 நவம்பர், 2024 at 7:07 PM
பகிர்:

புதுவை மாநிலத்தில் சென்டாக் சாா்பில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இறுதி தகுதிப் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்டாக் ஒருங்கிணைப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டசெய்திக் குறிப்பு:

புதுவை மாநிலத்தில் முதுநிலை மருத்துவம் (எம்டி/எம்எஸ்) படிப்புகளுக்கான இறுதி தகுதிப் பட்டியலை சென்டாக் நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

கட்டண விவரமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள் நவ.24-ஆம் தேதிக்குள் தங்கள் விருப்ப தோ்வுகளை புதுப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்டாக் வெளியிட்ட இறுதிப் பட்டியலில் அரசு ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் 415 போ் இடம்பெற்றுள்ளனா். நிா்வாக இடங்களில் 1,668 போ் விண்ணப்பித்துள்ளனா்.

முறையான சான்றிதழ்கள் வழங்காதது உள்ளிட்ட காரணங்களால் 92 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.