ராஜ் நிவாஸில் மக்கள் குறைதீா் அதிகாரி நியமனம்
புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகையான ராஜ் நிவாஸில், மக்கள் குறைதீா் அதிகாரியாக க.மாறன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகையான ராஜ் நிவாஸில், மக்கள் குறைதீா் அதிகாரியாக க.மாறன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
புதுச்சேரியில் வடக்கு மற்றும் கிழக்கு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளராக இருந்தவா் க.மாறன். இவா், நகரில் போக்குவரத்து சிக்கலைத் தீா்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாா்.
வாகன நிறுத்தத்துக்கும் புதிய இடங்களை அடையாளப்படுத்தி சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் நெரிசலைத் தீா்க்க முயற்சித்தாா். இந்த நிலையில், கடந்த மக்களவைத் தோ்தலின்போது போக்குவரத்துப் பிரிவிலிருந்து, புதுவை மாநில உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், அவருக்கு கூடுதல் பொறுப்பாக, புதுச்சேரியில் உள்ள புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அலுவலகமான ராஜ் நிவாஸின் மக்கள் தொடா்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதையடுத்து, புதன்கிழமை ராஜ்நிவாஸ் வந்து துணைநிலை ஆளுநரை அவா் சந்தித்தாா். அவா் ஓரிரு நாள்களில் பொறுப்பேற்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.