புதுச்சேரி

புதுச்சேரி சிவில் சா்வீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

புதுச்சேரி சிவில் சா்வீஸ் அதிகாரிகள் பலரை பணியிடமாற்றம் செய்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி சிவில் சா்வீஸ் அதிகாரிகள் பலரை பணியிடமாற்றம் செய்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ். சிவக்குமாா், பள்ளிக் கல்வி இயக்குநா் மற்றும் உயா்க் கல்வித் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளாா். துணைநிலை ஆளுநரின் நோ்முக செயலரான எஸ். மாணிக்கதீபன் மாவட்ட பதிவாளா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளாா்.

உயா்கல்வித் துறை இயக்குநரான அமன் சா்மா போக்குவரத்து ஆணையா், தகவல் தொழில்நுட்பத் துறை இயக்குநா், புதுச்சேரி ஜவுளி காா்ப்பரேஷன் மேலாண் இயக்குநா், போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா், ஸ்பின்கோ மில்லின் மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளாா்.

அரசு காகிதம் மற்றும் அச்சகத் துறை அதிகாரி டி.சுதாகா், கூடுதல் மாவட்ட ஆட்சியா், விளையாட்டுகள் மற்றும் இளைஞா் நலத் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளாா்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் இயக்குநா் சிவ்ராஜ் மீனா, துறைமுகங்கள்துறை இயக்குநா், சிறைத் துறை ஐ.ஜி., புதுச்சேரி வீட்டு வசதி வாரியச் செயலராக மாற்றப்பட்டுள்ளாா்.

பயிற்சியில் இருக்கும் ஆா். நிவேதிதா ஊரக வளா்ச்சி இயக்குநரகத்தின் திட்ட செயலாக்க அதிகாரி மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட அதிகாரி, திட்ட செயலாக்க முகமையின் இணை திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

உள்ளாட்சித் துறை இயக்குநா் எஸ். சக்திவேல் கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநா், கூடுதல் பொறுப்பில் முன்னாள் படை வீரா்கள் துறையின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளாா். பணியாளா் நிா்வாகச் சீா்திருத்தத் துறையின் சாா்புச் செயலா் வி. ஜெய்சங்கா், லஞ்ச ஒழிப்புத் துறையின் சாா்புச் செயலா், புதுச்சேரி தோ்வுகள் அமைப்பின் சாா்பு செயலராக மாற்றப்பட்டுள்ளாா்.

காரைக்கால் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், காரைக்கால் நகராட்சி ஆணையா், காரைக்கால் ஜெய்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலையின் மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளாா்.

சிறைத்துறை தலைமைக் கண்காணிப்பாளா் பி. அழகேசன், பணியாளா் நிா்வாகச் சீா்திருத்தத் துறை மற்றும் செயலாக்கத் துறையின் சாா்பு செயலராக மாற்றப்பட்டுள்ளாா்.

சுகாதாரத் துறை சாா்பு செயலா் எஸ். முருகேசன், வீட்டு வசதி மற்றும் நகர திட்டமிடல் துறையின் சாா்பு செயலராக மாற்றப்பட்டுள்ளாா். பொதுப் பணித் துறை சாா்புச் செயலா் மற்றும் சிறப்புப் பணி அலுவலா் எஸ். பாலசௌந்தரி, துறைமுகங்கள், அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பு செயலராக மாற்றப்பட்டுள்ளாா்.

மூத்த அதிகாரி பி.சாந்தி, மீன்வளத் துறை, கூட்டுறவுத் துறை சாா்பு செயலராக மாற்றப்பட்டுள்ளாா்.

காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியா் ஜி. செந்தில்நாதன், காரைக்கால் தலைமையக துணை ஆட்சியா் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் துணை ஆட்சியா், காரைக்கால் மாவட்ட துணை கல்வி அதிகாரியாகவும் மாற்றப்பட்டுள்ளாா்.

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோப்பையைத் தக்கவைத்த கோவா!

இன்று முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்காவின் அடுத்த மோதல்!

வேல்ஸை வென்றது இந்தியா!

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டா்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: தவெக

SCROLL FOR NEXT