மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் புதுவை வந்தடைந்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று (டிச. 9) காலை நடைபெறவுள்ள தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்காக கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கியூஆர் குறியீடு இருந்தால் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 5 ஆயிரம் பேருக்கு மட்டும பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலத்தினர் இக் கூட்டத்துக்கு வர வேண்டாம். அனுமதி அட்டை இல்லாதவா்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, குடிநீர் வசதிக்காக பிளாஸ்டிக் டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தைப் பிற்பகல் 12.30 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்றும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
விஜய் இன்று காலை 8 மணிக்கு பனையூரில் உள்ள வீட்டிலிருந்து காரில் புறப்பட்டு, அங்கிருந்து சாலை வழியாக உப்பளம் துறைமுக வளாகத்துக்கு வருகை தந்துள்ளார்.
விஜய் பிரசார வாகனத்தில் நின்றபடி பேசவுள்ளார். கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கைகள் வசதி கிடையாது. நின்றபடியே விஜய்யின் பேச்சைக் கேட்கவுள்ளனர்.
இதையும் படிக்க: சென்னை: 41 இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து! பயணிகள் அவதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.