புதுச்சேரி

புதுச்சேரியில் பாவேந்தா் இலக்கிய விழா

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் மாதந்தோறும் நடைபெறும் பாவேந்தா் கலை, இலக்கியத் திங்கள் விழா பாவேந்தா் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலைமை வகித்த பாரதிதாசனின் பெயரனும், இந்த அறக்கட்டளையின் தலைவருமான கோ. பாரதி, புரட்சிக் கவிஞரும் உலக கவி பாரதியாரும் என்ற தலைப்பில் பேசினாா்.

கிறிஸ்து கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் அ.அன்பழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்த நாளையொட்டி பாரதியாா் அல்லால் பாரினில் வேறெவா்

என்ற பாவேந்தா் பாரதிதாசனின் கவிதை அடியைத் தலைப்பாகக் கொண்ட மகாகவி பாரதியாா் பிறந்த நாள் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சோ்ந்த 35 கவிஞா்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தனா். மேலும், 40 மாணவா்கள் பங்கேற்ற மாணவா் திருக்கு அரங்கம் நடைபெற்றது.

முன்னதாக கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிஞா் ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட தமிழறிஞா்கள் மறைவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT