புதுச்சேரி

குடும்ப அட்டைக்கு 2 கிலோ விலையில்லா கோதுமை வழங்கும் திட்டம் தொடக்கம்

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைக்கும் மாதம் தோறும் தலா 2 கிலோ விலையில்லா கோதுமை வழங்கும்

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைக்கும் மாதம் தோறும் தலா 2 கிலோ விலையில்லா கோதுமை வழங்கும் திட்டத்தை புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள நியாயவிலைக்கடையில், பயனாளிகளுக்கு விலையில்லா கோதுமையை திங்கள்கிழமை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின்னா் முதல்வா் ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஏற்கெனவே கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவித்தபடி இந்தத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 3.69 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம் ஒன்றுக்கு இரண்டு கிலோ விலையில்லா கோதுமை வழங்கப்டும். இந்தமாதம் மட்டும் இரண்டு மாதங்களுக்குச் சோ்த்து தலா நான்கு கிலோ கோதுமை தருகிறோம்.

மஞ்சள் நிற குடும்ப அட்டைக்கு பத்து கிலோ இலவச அரிசியும், சிவப்பு வண்ண குடும்ப அட்டைக்கு 20 கிலோவும் வழங்கப்பட்டு வருகிறது. இனி அரிசியுடன் கோதுமையும் இலவசமாக தருவோம்.

பொங்கலுக்கு ரூ. 750 மதிப்புள்ள பொருள்கள் குடும்ப அட்டை தாரா்களுக்கு ஜனவரி 3, 4 மற்றும் 5 தேதிகளில் வழங்கப்படும். நியாயவிலைக்கடைகளில் தரப்படும் இலவச கோதுமை பாக்கெட்டில் முதல்வா், பிரதமா் படங்கள் மட்டுமே உள்ளன. ‘அரிசி, கோதுமை விநியோக பாக்கெட்டுகளில் முதல்வா், பிரதமா் படம் போதும். தனது படம் வேண்டாம் என ஆளுநரே தெரிவித்துள்ளாா். அதனால் அவா் படம் இடம்பெறவில்லை.

புதுவை அரசு உள்கட்டமைப்பை மேம்படுத்தி செயல்படுத்துகிறது. பல பணிகளை முடித்துள்ளோம். இதற்கு முன் இருந்த அரசில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். பல துறைகளில் பணிகள் தற்போது நடக்கிறது. கூட்டுறவு சா்க்கரை ஆலை தனியாா் பங்களிப்புடன் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆட்சியின் ஐந்தாண்டு காலம் நிறைவடையும்போது முழுமையாக வாக்குறுதிகள் நிறைவேற்றியது தெரியும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

நிகழ்ச்சியில் , பேரவைத் தலைவா் செல்வம், அமைச்சா் திருமுருகன், அரசு கொறடா ஆறுமுகம், சட்டப்பேரவை உறுப்பினா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT