புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அதிகாரியும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் வெளியிட்டார்.
புதுச்சேரியில் உள்ள 25 தொகுதிகளில் மொத்தம் 8.51 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் 85,000 பேர் (10.04%) நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில், 7.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா ஆகிய 3 மாநிலங்களிலும் புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுவதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், இந்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி (சிஇஓ) மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி (டிஇஓ) வழங்கினர்.
வரைவுப் பட்டியலில் பெயர் விடுபட்ட, வேறு பகுதிக்கு குடிபெயர்ந்த, இறந்த மற்றும் போலி வாக்காளர்கள் குறித்த தகவல்களும் வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத தகுதியுடைய வாக்காளர்கள் ஜன. 15 ஆம் தேதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்குக்குப் பிறகு, வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்களை புதுச்சேரி யூனியன் பிரதேச முதன்மை தேர்தல் அதிகாரி பி. ஜவஹர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏற்கெனவே 10.21 லட்சம் (10,21,578) வாக்காளர்கள் இருந்தனர். இப்போது சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9.18 லட்சம் (9,18,111) வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில் இப்போது இடம் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 90 சதவீதம். நீக்கப்பட்டவர்கள் சுமார் 10 சதவீதம். இதில் இறப்பு 2 சதவீதம், முகவரி மாற்றம் மற்றும் முகவரியில் இல்லாதவர்கள் 8 சதவீதம். இரட்டிப்பு பதிவு 0.2 சதவீதம் அடங்கும் என்றார் ஜவஹர்.
இதையும் படிக்க: சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.