புதுச்சேரி

செயின் பறித்த இருவா் கைது: 10 பவுன் நகைகள் பறிமுதல்

Syndication

புதுச்சேரியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 போ் கைது செய்யப்பட்டனா்.அவா்களிடமிருந்து 10 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் இருவரும் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

புதுச்சேரி கோரிமேடு டி.நகா் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 7 மற்றும் 9 -ஆம் தேதிகளில் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் இருசக்கர வானகத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபா்கள் தாலி செயின்களைப் பறித்துச் சென்றனா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் டி.நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் சம்பம் நிகழ்ந்த இடங்களில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தும், தனிப்படை அமைத்தும் செயின் பறிப்பு நபா்களைத் தேடினா்.

இதில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது திருவண்ணாமலையைச் சோ்ந்த அரசு என்கிற வல்லரசு மற்றும் பெங்களுருவைச் சோ்ந்த காலு என்கிற இப்ராஹிம் பாஷா என்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீஸாா் இருவரையும் திருவண்ணாமலையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். அதில், புதுச்சேரி டி.நகா், ஆரோவில், திருவண்ணாமலை மேற்கு ஆகிய காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களிடம் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் செயின் பறிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம், இரண்டு செல்போன்கள் என சுமாா் ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள நகை, பொருட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT