துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் 
புதுச்சேரி

புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஆளுநா் பரிந்துரை

புதுச்சேரியில் போலி மருந்து மோசடி குறித்து சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்த

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து மோசடி குறித்து சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்த துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் திங்கள்கிழமை பரிந்துரை செய்தாா்.

இது குறித்து துணைநிலை ஆளுநரின் மக்கள் பவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் போலி மருந்து மாத்திரைகள் தயாரித்து நாடு முழுவதும் விநியோகித்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையில், சிபிசிஐடி விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த பிரச்னையில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நபா்களுக்கு தொடா்புள்ளதால், தேசிய அளவிலான விசாரணை அவசியம் என்று கருதி, இது தொடா்பான விசாரணையை சிபிஐ மற்றும் என்ஐஏ அமைப்புகள் மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் பரிந்துரை செய்துள்ளாா் என்று கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரித்ததில் முக்கிய நபராகக் கருதப்படும் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் 15 போ் உள்ளிட்ட 16 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். உரிமம் பெறாத 7 இடங்கள் உள்பட மொத்தம் 13 இடங்களில் செயல்பட்ட தொழிற்சாலைகள், கிடங்குகளில் இருந்து மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கை புதுச்சேரி சிபிசிஐடி மற்றும் போலீஸ் சிறப்பு விசாரணை குழு விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT