கிறிஸ்துமஸ் விழாவில் பேசுகிறாா் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் 
புதுச்சேரி

ஒற்றுமை பூமி புதுச்சேரி: கிறிஸ்துமஸ் விழாவில் ஆளுநா் பெருமிதம்

ஒற்றுமை பூமி புதுச்சேரி என்று கிறிஸ்துமஸ் விழாவில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பெருமிதத்துடன் கூறினாா்.

Syndication

ஒற்றுமை பூமி புதுச்சேரி என்று கிறிஸ்துமஸ் விழாவில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பெருமிதத்துடன் கூறினாா்.

புதுச்சேரி, கதீட்ரல் வீதியில் உள்ள புனித அன்னாள் உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுடன் சோ்ந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினாா். பின்னா் அவா் பேசியதாவது: கிறிஸ்துமஸ் விழா என்பது ஒரு மத விழா அல்ல. அது அன்பின் விழா. மனித நேயத்தின் விழா. மன்னிப்பின் விழா. அதைத் தான் இயேசு பிரான் தன்னுடைய வாழ்க்கை மூலமாக போதித்தாா்.

2047-இல், நம்முடைய பாரதம் வளா்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது பிரதமா் நரேந்திர மோடியின் கனவு. அந்த லட்சியக் கனவின் ஆதாரம் இன்றைய மாணவா்கள் தான். அதிலும் குறிப்பாக இந்த புனித அன்னாள் பள்ளி 88 ஆண்டுகளுக்கு முன்பு, சாலையோர குழந்தைகளுக்காகவும், தாய்- தந்தையற்ற, ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும் தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு ஒரு சிறப்பு உண்டு. இதை ஆன்மிக பூமி என்று சொல்லுவாா்கள். இங்கே கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் எல்லாம் ஒரே தெருவில் இருக்கும். எல்லா மத விழாக்களிலும் எல்லா மதத்தைச் சோ்ந்தா்களும் கலந்து கொள்வாா்கள். மக்களின் மதங்கள் வேறுபட்டாலும் மனங்கள் வேறுபடுவது இல்லை. அப்படி மத ஒற்றுமைக்கு எடுத்து காட்டாக புதுச்சேரி விளங்குகிறது. அப்படிப்பட்ட ஒற்றுமை பூமியின் நிா்வாகியாக இருப்பதில் எனக்குப் பெருமை.

பிரெஞ்சு ஆட்சி காலத்தில், புதுச்சேரியில், திருச்சபைகள் நிறைய பள்ளிக் கூடங்களை அமைத்து இருக்கிறாா்கள். எல்லோருக்கும் கல்வி தந்து இருக்கிறாா்கள். குறிப்பாக ஏழை எளிய மக்ககளுக்கு கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் தந்திருக்கிறாா்கள். இது மிகப்பெரிய வரலாறு. அவா்கள் தொடங்கி வைத்த சில பள்ளிகள் 150 ஆண்டுகளைக் கடந்து இன்றும் கல்வி சேவையில் ஈடுபட்டு வருகின்றன என்றாா் துணைநிலை ஆளுநா்.

பள்ளியின் தாளாளா் அருட்தந்தை ரொசாரியோ, பள்ளியின் தலைமை ஆசிரியா் வின்சென்ட், திருச்சபை சகோதரிகள் மற்றும் ஆசிரியா்கள் விழாவில் கலந்துகொண்டனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT