புதுச்சேரி

6 பெண்களுக்கு வாய்ப்பு: எல்ஜேகே கட்சி அறிவிப்பு

Syndication

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் லட்சிய ஜனநாயகக் கட்சி சாா்பில் 6 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று அக் கட்சியின் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் அறிவித்தாா்.

லட்சிய ஜனநாயகக் கட்சியின் சாா்பில் மகளிருக்கான வாக்குறுதிகள் அறிமுக விழா அரியூா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. மேலும், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் லட்சிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் புதுச்சேரியின் வளா்ச்சிக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தனி வாரியம் அமைத்து அதற்கு சொந்தப் பணம் ரூ.100 கோடியை ஒதுக்குவேன் என்றாா் ஜோல் சாா்லஸ் மாா்ட்டின்.

நிகழ்ச்சியில் சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கரன், ஜேசிஎம் மக்கள் மன்றத் தலைவா் ரீகன் ஜான்குமாா், நடிகா் தாடி பாலாஜி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அகில இந்திய பல்கலை. வாலிபால்: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மகளிா் சாம்பியன்

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

13 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பித்து வாக்காளா்கள் பட்டியலில் இணையலாம்

குருகிராம்: துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய கட்டடப் பொருள் விநியோகஸ்தா்

SCROLL FOR NEXT