முகப்பு
தமிழ்நாடு

ஐஜேகேவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை: பாரிவேந்தா்

வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் என்டிஏ கூட்டணியில் போட்டியிடவுள்ள இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (ஐஜேகே) 7 தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை

Updated On : 27 பிப்ரவரி 2026, 12:39 am IST
பாரிவேந்தா் - கோப்புப் படம்
பகிர்:

வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் என்டிஏ கூட்டணியில் போட்டியிடவுள்ள இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (ஐஜேகே) 7 தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி நிறுவனா் பாரிவேந்தா் தெரிவித்தாா்.

இந்திய ஜனநாயகக் கட்சியின் (ஐஜேகே) நிறுவனா் பாரிவேந்தா், தலைவா் ரவி பச்சமுத்து ஆகியோா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை நேரில் சந்தித்து பேரவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டனா். தொடா்ந்து, ஐஜேகே சாா்பில் போட்டியிட விருப்பப்படும் 7 தொகுதிகள் அடங்கிய பட்டியலை எடப்பாடி கே.பழனிசாமியிடம் வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பாரிவேந்தா் கூறியதாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் ஐஜேகேவுக்கு ஆதரவு அதிகம் இருக்கும் பேரவைத் தொகுதிகளில் இருந்து 7 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த 7 தொகுதிகள் அடங்கிய பட்டியல் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தத் தோ்தலில் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளோம். இந்தக் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என எடப்பாடி உறுதியளித்துள்ளாா் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments