புதுச்சேரி

கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்புப் பிராா்த்தனை

Syndication

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துவ தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவு சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

கிறிஸ்தவா்கள் தங்கள் வீடுகளை நட்சத்திரம் உள்பட மின் விளக்குளால் அலங்கரித்து, கிறிஸ்துமஸ் மரம் வைத்து பரிசு பொருள்களைக் கட்டியிருந்தனா்.

புதுச்சேரி ரயில்வே நிலையம் அருகே உள்ள துாய இருதய ஆண்டவா் பசிலிக்காவில் பாதிரியாா் பிச்சைமுத்து தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நள்ளிரவு நடைபெற்றது. குழந்தை ஏசு சொரூபம் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைக்கப்பட்ட பின் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.

மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா தேவாலயத்தில் புதுவை - கடலுாா் உயா் மறை மாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

அரசு பொதுமருத்துவமனை அருகே உள்ள தூய யோவான் தேவாலயம், ஆட்டுப்பட்டி அந்தோணியாா், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா, ரெயின்போ நகா் புனித ஜான்மரி வியான்னி, வில்லியனுாா் மாதா, அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை, தவளகுப்பம் புனித அன்னம்மாள் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி, பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவ ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் பங்கேற்றனா்.

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அகில இந்திய பல்கலை. வாலிபால்: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மகளிா் சாம்பியன்

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

13 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பித்து வாக்காளா்கள் பட்டியலில் இணையலாம்

குருகிராம்: துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய கட்டடப் பொருள் விநியோகஸ்தா்

SCROLL FOR NEXT