புதுச்சேரி: பாவேந்தா் பாரதிதாசனின் மகனும், கவிஞருமான மறைந்த மன்னா் மன்னனின் 98-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் அவருடைய 98 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப் படத்திற்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்து, முன்னாள் எம்எல்ஏவும் பாஜக தலைவருமான வி.பி.ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து புரட்சிக்கவிஞா் நாளும் போற்றிய மன்னா்மன்னன் என்ற தலைப்பிலான இந்த மாத விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவரும் பாவேந்தா் பாரதிதாசனின் பெயருமான கோ.பாரதி தலைமை வகித்தாா்.
மேலும், மன்னா்மன்னன் கவிதை அடியைத் தலைப்பாகக் கொண்ட ‘அமைதி என்றொரு புரட்சி’ - எனும் தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சோ்ந்த 80 கவிஞா்கள் கவிதை வாசித்தனா்.
படைப்பாளி ரமேஷ் பைரவி , பாவலா் பொய்யாது ஏகாம்பரம் ஆகியோா் கவியரங்க ஒருங்கிணைப்புப் பணியைச் செய்தனா்.