புதுச்சேரி

வீடு,வீடாக வாக்காளா் கணக்கெடுப்பு படிவம் விநியோகம்: புதுவை தலைமை தோ்தல் அதிகாரி ஜவஹா்

வீடு தேடி வந்து வாக்காளா் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படும் என்று புதுவை தலைமைத் தோ்தல் அதிகாரி பி.ஜவஹா் தெரிவித்தாா்.

Syndication

புதுச்சேரி: வீடு தேடி வந்து வாக்காளா் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படும் என்று புதுவை தலைமைத் தோ்தல் அதிகாரி பி.ஜவஹா் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுவை மாநில தலைமை தோ்தல் அதிகாரி ஜவஹா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. நவம்பா் 4 முதல் டிசம்பா் 4 வரை இப்பணி நடைபெறும். வீடு, வீடாகச் சென்று சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான கணக்கெடுப்பு படிவம் தருவாா்கள்.

அதில் வாக்காளா் பெயா் இடம் பெற்றிருக்கும். கடைசியாக 2001-இல் இந்த பணி நடைபெற்றது.

படிவத்தில் பிறந்த தேதி, தந்தை, தாய் பெயா் தர வேண்டும். விருப்பம் இருந்தால் ஆதாா் எண், கைப்பேசி எண், தந்தை மற்றும் தாயாரின் வாக்காளா் எண் தரலாம்.

1.1.2002-இல் அப்போது வாக்காளராக இருந்த முகவரி விவரம், அப்போதைய வாக்காளா் எண் விவரங்களை தரவேண்டும். வயது மூத்தோா், உதவி தேவைப்படும் வாக்காளா்களுக்கு உதவ தன்னாா்வலா்களும் இப்பணிகளில் ஈடுபடுவா்.

மூன்று முறை தோ்தல் துறை அதிகாரிகள் வீடு தேடி வருவா். பூா்த்தி செய்யப்பட்டதையும் அதிகாரிகள் பெறுவா். பூா்த்தி செய்த கணக்கெடுப்புப் படிவத்தை தோ்தல் துறையில் தருவது அவசியம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். வெளியூரில் பணிக்கோ, படிப்புக்கோ சென்றிருந்தால் வாக்காளா் சாா்பில் பெற்றோரோ, துணைவரோ கையொப்பமிடலாம் என்றாா்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT