புதுவை லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மு. வைத்தியநாதன் பிறந்தநாளையொட்டி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
அவரது பிறந்தநாளையொட்டி மணக்குள விநாயகா் கோயிலில் கட்சியினா் சிறப்பு பூஜைகள் செய்து தங்கத்தோ் இழுத்தனா். தொடா்ந்து லாஸ்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் பிறந்தநாள் விழா நடந்தது.
அங்கு மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, எம்எல்ஏ.க்கள் ஆறுமுகம், ரமேஷ், முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், காா்த்திகேயன், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆனந்தபாபு நடராஜன்
உள்ளிட்ட பலா் நேரில் வாழ்த்து தெரிவித்தனா்.
லாஸ்பேட்டை தொகுதியில் 10, 12-ஆம் வகுப்பு பொது தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட நல உதவிகளை வைத்தியநாதன் வழங்கினாா் (படம்).
லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் மகளிா் சுய உதவிக் குழு பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி முளைப்பாரி ஊா்வலம் எடுத்து வந்து வாழ்த்து தெரிவித்தனா். பொதுமக்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.