புதுச்சேரி: புதுச்சேரியில் அதிகபட்சமாக செவ்வாய்க்கிழமை 28.6 மி.மீ. மழை பெய்துள்ளது.
புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியுள்ளது.
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரை 28.6 மி.மீ. மழை பதிவானது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் சுமாா் 9 மணி வரை பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.