முகப்பு
புதுச்சேரி

புதுவை தேர்தல்! மாநில அந்தஸ்து, கர்ப்பிணிகளுக்கு ரூ. 25,000, 100% பயிர்க் காப்பீடு: தவெக வாக்குறுதிகள்!

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 7:13 AM
தவெக தலைவர் விஜய் - விடியோ க்ளிப்
பகிர்:

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார்.

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடியில் தவெகவின் தேர்தல் பிரசாரத்தில் விஜய் பேசுகையில், "இங்கு இரண்டு கூட்டணி உள்ளது. இங்கு ஏற்கெனவே இருக்கிற கூட்டணிகள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் - திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே இங்கு 5, 6 முறை ஆட்சியில் இருந்தனர்.

இந்தக் கூட்டணியில் இருந்த தலைவர் ஒருவர், மக்களை மட்டுமின்றி அவர்களின் தலைவரையே ஏமாற்றியிருக்கிறார்.

Advertisement

விஜய் - விடியோ க்ளிப்

திமுகவும் காங்கிரஸும் கூட்டணி என்று சொல்லிக்கொண்டு, சில தொகுதிகளில் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கின்றனர்.

தமிழ்நாட்டிலும் திமுக - காங்கிரஸ் அணி குழப்ப அணியாகத்தான் இருக்கின்றனர்; புதுச்சேரியிலும் அதுபோலவே குழம்பிப்போன அணியாகவே இருக்கின்றனர்.

என்ஆர் காங்கிரஸும் பாஜகவும் சேர்ந்த கூட்டணி, சேர்ந்திருக்க முடியாமல் சோர்ந்துபோன கூட்டணியாக உள்ளது.

தமிழ்நாட்டில் எப்படி இருவர் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறார்களோ, அதேபோலத்தான் புதுச்சேரியிலும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கலாம் என 20 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லியும்கூட, ஏன் இதுவரையில் ஒரு அரசுகூட இதனைக் கண்டுகொள்ளவில்லை.

இந்த ஏமாற்றுக் கூட்டணிகளுக்கும், பொருந்தாக் கூட்டணிகளுக்கும், ஓட்டை உடைசல் கூட்டணிகளுக்கும் வாக்களித்து ஏமாற வேண்டாம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளாக...

  • துணைநிலை ஆளுநரின் தலையீடு இல்லாத முழுமையான மாநில அந்தஸ்தை பெற சட்டப்படி 100 சதவிகிதம் முயற்சிப்போம்.

  • தவெக ஆட்சி அமைந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்.

  • மகப்பேறு உதவித்தொகையாக ரூ. 25,000 வழங்கப்படும்.

  • அனைத்து அரசுப் பணிகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

  • 100 சதவிகித பயிர்க் காப்பீடு வழங்கப்படும்.

  • மீன்பிடிக்கச் செல்வோருக்கு லிட்டருக்கு ரூ. 20 மானியம் டீசலுக்கு வழங்கப்படும்.

  • ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 25 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.

  • வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட்வரை கட்டணமின்றி மின்சாரம் வழங்கப்படும்.

  • காரைக்கால் மாஹே, ஏனாம் மாஹே பகுதிகளில் 25 சதவிகித வளர்ச்சி செலவினங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.

summary

Vijay Announces TVK's Election Promises for the Puducherry Assembly Elections 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments