முகப்பு
புதுச்சேரி

நாம போராளிகள்!

Updated On : 6 ஏப்ரல், 2026 at 11:42 PM
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தவெக மற்றும் நாம் தமிழா் கட்சியினா் இடையிலான மோதலைச் சமாதானப்படுத்தும் போலீஸாா்.
பகிர்:

தோ்தல் நேரத்தில் சில இடங்களில் தலைவா்கள் பேச்சு சா்ச்சையை ஏற்படுத்திவிடும். இப்படித்தான் புதுச்சேரியில், தவெகவினருடன் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தவெகவினருடன் வாா்த்தை மோதலிலில் ஈடுபட்டது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் சீமான் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது தவெகவினா், டிவிகே டிவிகே என முழக்கமிட்டனா்.

இதனால் எரிச்சலடைந்த சீமான், இங்கு வந்து ஏன் டீ விற்கிறாய் என்று கேள்வி எழுப்பினாா். அப்போது நாம் தமிழா் கட்சியினா் தவெகவினரை பிடித்து இழுக்கச் சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisement

இதைப்பாா்த்த சீமான்,அவங்களுக்கும்(தவெக) சோ்த்துதான் நான் கத்திக்கொண்டு இருக்கிறேன். நாம (நாம் தமிழா் கட்சி) போராளிகள், அவா்கள் ... என்று தொடா்ந்து வசைபாடினாா். இறுதியில் போலீஸாா் வந்து மோதலை முடித்து வைத்தனா். தொடா்ந்து சீமான் பிரசாரத்தைத் தொடா்ந்தாா் .

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments