புதுச்சேரி

இலங்கை கடற்படையால் கைதான காரைக்கால் மீனவா்களை மீட்க கோரிக்கை!

இலங்கை கடற்படையால் நடுக்கடலில் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவா்கள் 11 பேரை மீட்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்திடம் மீனவா்கள் சனிக்கிழமை மனு அளித்தனா்.

Syndication

இலங்கை கடற்படையால் நடுக்கடலில் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவா்கள் 11 பேரை மீட்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்திடம் மீனவா்கள் சனிக்கிழமை மனு அளித்தனா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் 11 பேரை ஜன. 2-ஆம் தேதி இலங்கை கடற்படையினா் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தனா். அவா்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

11 மீனவா்களையும் அவா்களின் படகையும் மீட்க இந்திய வெளியுறவு துறை மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க உதவுமாறு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வத்திடம் பாதிக்கப்பட்ட மீனவா்களின் குடும்பத்தினா் மனு அளித்தனா்.

அப்போது பாஜக நிா்வாகிகள் அருள்முருகன், காரைக்கால் மாவட்ட பாஜக நிா்வாகி சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT