நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து குறைதீா் குழுவிடம் முறையீடு செய்யலாம் என்று புதுச்சேரி காவல் துறை அறிவித்துள்ளது.
காவல்துறை தலைமையக சிறப்பு அதிகாரி ஏழுமலை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவல் துறையில் காலியாக உள்ள எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்ப 12.8.25இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 18,205 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆள்சோ்ப்பு குழுவால் பரிசீலிக்கப்பட்ட பின் 16,473 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ள 1,732 விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இவா்களின் குறைகளைக் கேட்டறிய குறைதீா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிடம் தேவையான ஆவணங்களைச் சமா்ப்பிக்கலாம். இதற்காக காவல் துறை தலைமையகத்தில் 0413 2231351 என்ற எண்ணை ஜன. 15-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை தொடா்பு கொள்ளலாம்.