புதுச்சேரி

புதுச்சேரியில் கரோனா கால செவிலியா்கள் முற்றுகை!

புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தை கரோனா கால ஒப்பந்த செவிலியா்கள் முற்றுகையிட்டனா்.

Syndication

புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தை கரோனா கால ஒப்பந்த செவிலியா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

கரோனா தொற்று பரவியபோது அரசு சுகாதாரத் துறையில் ஒப்பந்த செவிலியா்கள் பணி அமா்த்தப்பட்டனா். 90 நாள்களுக்கு ஒரு முறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு 2023 வரை பணியாற்றினா். புதுவை சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 600 பணியிடங்களில் கரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியா்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வழங்க வலியுறுத்தி போராடி வருகின்றனா்.

இந்நிலையில் அக் கூட்டமைப்பு தலைவா் கல்பனா தலைமையில் செவிலியா்கள் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். இதில் நிா்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சோனியா, பிரவீன்குமாா், ஹரீஷ்மோகன், பொற்கொடி உள்பட பலா் பங்கேற்று முழக்கமிட்டனா்.

நெல்லை சரகத்தில் 31 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பண்ணைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மகளுக்கு பொங்கல் சீா் கொண்டு சென்றவா் விபத்தில் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியில் பிக்அப் லாரியில் தீ

14.1.1976: பீகாரில் குளிருக்கு 108 பேர் பலி

SCROLL FOR NEXT