காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியதாக இளைஞர் கைது
விழுப்புரத்தில் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில் தெரிவித்தது:
விழுப்புரம் வி.மருதூரைச் சேர்ந்தவர் சேகர் மகள் எஸ்.சுதா(25). விழுப்புரம் தக்கா தெருவைச் சேர்ந்தவர் அப்துல்கரீம் மகன் அமானுல்லா . இவர்கள் 6 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இந்நிலையில் 2011-ல் சுதா கர்ப்பமானார்.
இதையறிந்த அமானுல்லா, கருக்கலைப்பு மாத்திரையை சுதாவுக்கு வழங்கி கருவை கலைத்துள்ளார். பின்னர் சுதாவை திருமணம் செய்யாமல் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.
நீண்ட போராட்டத்துக்கு பின்னர், 2012 ஜூன் 10-ஆம் தேதி த.மு.மு.க. நிர்வாகி உயர்நிலைப் பொறுப்பாளர் நாசர்உமரி தலைமையில் அமானுல்லா, சுதாவை இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகு திருமணம் செய்துள்ளார்.
அதன் பின் சுதாவுக்கு ஆமீனா எனப் பெயர் சூட்டப்பட்டது. இருப்பினும் ஆமீனாவுடன், குடும்பம் நடத்தாமல், முதல் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், திருமணம் செய்து தன்னை ஏமாற்றி விட்டதாக அமானுல்லா மீது விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆமீனா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மகளிர் போலீஸ் எஸ்.ஐ. சுஜாதா வழக்குப்பதிந்து அமானுல்லாவைக் கைது செய்தார்.