ராமதாஸ், அன்புமணி வீடுகளுக்கு அனுப்பப்பட்ட தடையுத்தரவு நகல்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில் நுழையத் தடை விதிக்கப்ட்ட உத்தரவு நகல்கள் பா.ம.க. நிறுவனர் ரமாதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மற்றும் பல்வேறு கட்சி மற்றும் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்கள் மட்டுமின்றி விழுப்புரம் டிஐஜி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி, அனைத்து டி.எஸ்.பிக்கள், சப்-கலெக்டர்கள், வட்டாட்சியர்கள் ஆகியோருக்கும் பார்வைக்காக நகல்கள் அனுப்பப்பட்டுள்ளன. முக்கிய செயலர்கள் மற்றும் மாநில போலீஸ் தலைமைக்கும் இதன் நகல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த உத்தரவில், கடந்த 25-ம் தேதி மரக்காணம் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பஸ்கள் எரிக்கப்பட்டு, சில பஸ்கள் உடைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிக்கைப்படி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள், வன்னியர் சங்க உறுப்பினர்கள், வேறு எந்த கட்சியின் மற்றும் சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மரக்காணம் பகுதியிலோ, அதனுடன் தொடர்புடைய பகுதியிலோ, 30-4-2013 முதல் பா.ம.க.வின் போராட்டம் நடைபெற்ற பகுதியிலோ நுழையத் தடை விதிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
மரக்காணம் சம்பவத்தையொட்டி ஜாதி ரீதியிலான பிரச்னையை உருவாக்கும் வகையில் எந்த அரசியல் கட்சியும், அமைப்பும் போராட்டங்கள், கூட்டங்களை நடத்தக் கூடாது. இதற்கு சி.ஆர்.பி.சி சட்டப் பிரிவு 144(1)-ன் படி தடைவிதிக்கப்படுகிறது எனத் தடையுத்தரவு நகலில் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்துள்ளார்.