விழுப்புரம்

ரயில் மறியல் முயற்சி: 100 விவசாயிகள் கைது

தினமணி

மத்திய அரசைக் கண்டித்து திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
 தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசைக் கண்டித்தும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில், திண்டிவனத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாழக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
 அவர்களை ரயில் நிலைய வளாகத்தில் வைத்து டிஎஸ்பி திருமால் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் காந்திசிலை அருகே இருந்த தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT