கோயில் உண்டியலில் திருட்டு
திண்டிவனம் அருகே கோயில் உண்டியலைத் திறந்து பணம் திருடியது குறித்து வெள்ளிமேடுபேட்டை போலீஸார் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திண்டிவனம் அருகே கோயில் உண்டியலைத் திறந்து பணம் திருடியது குறித்து வெள்ளிமேடுபேட்டை போலீஸார் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தாதாபுரத்தில் இருந்து கீழ்மலையனூர் செல்லும் வழியில் உள்ள அம்மன் கோயிலில் அதன் தர்மகர்த்தாவான கிருஷ்ணமூர்த்தி என்பவர் செவ்வாய்கிழமை மாலை வழக்கம் போலக் கோயிலைப் பூட்டிக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். புதன்கிழமை காலை வந்து பார்த்த போது, கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலின் பூட்டு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து டி.எஸ்.பி. திருமால் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். விரல்ரேகை நிபுணர் சண்முகம் வந்து அந்த இடத்தில் தடையங்களைச் சேகரித்தார். இதுகுறித்த புகாரின் பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.